ராமநாதபுரம், மார்ச் 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை குழு மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும் என அறிவுரை வழங்கிார்.
நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தல் 2019 மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3 வீதம் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் துணை வட்டாட்சியர் / வட்டார வளர்ச்சி நிலை அலுவலர் தலைமையில் ஒரு காவல்துறை சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், 1 வீடியோ பதிவாளர் என மொத்தம் 6 நபர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இக் குழு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பொது மக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், குறைகளை தெரி வித்திட ஏதுவாகவும்,தேர்தல் தொடர்பான விளக்கங்களை பெறவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா சேவை எண் கொண்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப் பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் தற்போது இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர்பான புகார்களை பொது மக்கள் புகைப்படம் வீடியோவுடன் எளிதில் தெரிவித்திடும் வகையில் சி-விஜில் என்ற செல்போன் செயலியினை அறிமுகப் படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலியினை கூகுள் ப்ளேஸ்டோர் தளத்திலும் அல்லது தேர்தல் ஆணைய இணைய தளத்திலிரு்தும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மார்ச் 11 முதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை குழு மற்றும் நிலைத்த கண்காணிப்புக்குழு அலுவலர்கள் பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் விழிப்புடன் பணியாற்றிட வேண்டுமென அறிவுரை வழங்கினார். அதேபால், கண்காணிப்பு பணியின்போது உரிய ஆவணமின்றி பணம்/பரிசு பொருட்கள் கைப்பற்றுகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையே பின்பற்றிட வேண்டும் எனவும் அதேவேளையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழகாட்டுதல்களை முறையை பின்பற்றிட வேண்டும்எனவும் அதேவேளையில் இத்தகைய கண்காணிப்பு பணிகளின் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படாதவாறு பணியாற்றிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறுிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர் சுமன், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உட்பட தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்கள் உடனடிருந்தனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை கண் காணிக்க12 பறக்கும்படை, 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் -மாவட்ட...