ராமநாதபுரம், மார்ச் 12-
ராமநாதபுரம் ஏவி.எம்.எஸ் மெட்ரிக் பள்ளியின் கிண்டர் கார்டன் பள்ளி குட்டீஸ் சுட்டீஸ் கலாட்டா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் ஏவி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏவிஎம்எஸ் கிண்டர் கார்டன் பள்ளி நடைபெறுகிறது. இப்பள்ளியில் குட்டீஸ் சுட்டீஸ் கலாட்டா 2019 நிகழ்ச்சி விழா நடைபெற்றது. விழாவிற்கு ராமநாதபுரம் ஆயிர வைசிய மகாஜன சபை தலைவர் மோகன் தலைமை வகித்து பேசும் போது, குழந்தைகளுக்கு காலையில் படிப்பு மாலையில் விளையாட்டு என்பதை பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும். கல்வி என்பதை பிள்ளைகளிடம் திணிக்க கூடாது. அவர்கள் வழியில் அவர்கள் விரும்புவதை படிக்க வைக்க வேண்டும். மாலையில் குழந்தைகள் மண்ணில் விளையாடுவது உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றது குறிப்பாக மணலில் விளையாடும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகும். மண்ணில் விளையாடிய பின் கை, கால்களை நன்கு கழுவ வேண்டும். கோடை காலத்தில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகளை வெளியே அனுப்பாதீர்கள். சிறு பிள்ளைகளுக்கு கல்விக்காக தனியாக கோச்சிங் அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும், என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் பேசும் போது, முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் இருந்ததால் அன்பு,கண்டிப்பு, கவனிப்பு, வேலைப்பயிற்சி போன்றவைகளை சொல்லித் தர பெரியவர்கள் இருந்தனர். தற்போதுள்ள காலத்தில் பிள்ளைகள் தனிமையில் இருக்கின்றனர். பிள்ளைகளுக்கு, மனதில் நல்ல கருத்துள்ள விதைகளை விதைக்க வேண்டும். பிள்ளைகள் மீது அக்கரை கொண்டு அன்பு செலுத்த வேண்டும். அன்பு இல்லை யெனில் பிள்ளைகள் தடம் மாறி செல்லும் நிலை உருவாகலாம், என்றார்.
பள்ளி தாளாளர் ஜெயக்குமார், பாசிப் பட்டரை ஜமாத் தலைவர் ஜபருல்லாகான், வாலியா காஸ் கணேசன், வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பொருளாளர் கமலகண்ணன், துணைத் தலைவர்கள் வாசுதேவன், கணேசன், இணை செயலாளர்கள் சரவணன், ஹரிஹரன் மற்றும் ஏவி.எம்.எஸ் கல்வி கமிட்டி உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் பங்கேற்றனர். விழாவில் குட்டீஸ்களின் கலை நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக அனைவரையும் கவர்ந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here