பி.வி.பட்டிணத்தில் த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் மாநில செயலாளர் சாதிக்பாட்சா பங்கேற்றார்
தொண்டி, ஆக 6 –
மனித நேய மக்கள் கட்சி இராமநதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பி.வி.பட்டிணத்தில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப் பெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் பட்டானி மீரான் தலைமை வகித்தார்.
இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில செயலாளர் மவுலவி அப்துல் காதர் மன்பி சிறப்புரையாற்றினார். தமுமுக மாநில செயலாளர்கள் சிவகாசி முஸ்தபா, சாதிக்பாட்சா ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமுமுக மாவட்ட செயலாளர் ஜிப்ரி மமக மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் மாவட்ட துணை தலைவர் அப்துல் அஜிஸ் , மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா , தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது அலி , சாகுல் ஹமீது , ஷாவித் அஸ்லாம் , மமக மாவட்ட துணை செயலாளர்கள் நிசார் , உபையத்துல்லா , காதர் ரிஸ்வான் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொண்டி பேரூர் தலைவர் காதர் நன்றி கூறினார்.