தேனி அருகிலுள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் பால கிருஷ்ணா புரத்தில் கல்லூரியின் பொருளாளர் தாமரைக்கண்ணன் தலைமையில் இரண்டு நாட்கள் நடைப் பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.தர்மலிங்கம் நாட்டு நலப்பணியில் கலந்துக் கொண்ட மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகளை வாழ்த்தியும் ஊக்கப் படுத்தியும், சிறப்புரை யாற்றினார்.துறை தலைவர்கள் திருமதி நளினி, ராஜா மாணிக்கம், சதிஷ், விரிவுரையாளர் திருமதி பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மேலும் கல்லூரி விரிவுரையாளர் லத்தீப் அகஸ்டின், கல்லூரி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனார். இம்முகாமை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் என். செல்வக்குமார் ஏற்பாடுகள் செய்து நன்றி உரையாற்றினார்.விரிவுரையாளர் ஆர்.பிரதீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இரண்டாம் நாள் சிறப்பு முகாமினை பாலகிருஷ்ணாபுரத்தில் கல்லூரியின் அமைப்பியல் துறைத் தலைவி நளினி முன்னிலையில் இரண்டாம் நாள் பணி நடைபெற்றது. சாலையோரத்தில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் எய்ட்ஸ் மற்றும் ரத்ததானம் பற்றிய கருத்தரங்கினை ஆர்.ஆர் சி கவுன்சிலர் திருமதி பி.முத்துலட்சுமி கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய், ரத்த தானம் பற்றிய விழிப் புணர்வை பொது மக்கள் மற்றும் மாணவர்களிடம் எடுத்துரைத்து சிறப்புரை யாற்றினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் செல்வக்குமார் மற்றும் பிரதீப் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here