சென்னை, மார்ச். 16 –

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.176.கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்த பணி ஆணையினை மாரச் 14 ஆம் தேதியன்று மேயர் பிரியா முன்னிலையில் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்பட்டது.

கடந்த 2021 வடகிழக்கு பருவமழையின் போது பெய்த கனமழையின் காரணமாக பெருநகர சென்னை முழுவதும் மழைநீர் தேங்கியது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்காத படியிருக்க நிரந்தர தீர்வுக்காண்பதற்கென ஓய்வுப்பெற்ற குடிமைப்பணி அலுவலர் திருப்புகழ் தலைமையில் வல்லுநர்களைக் கொண்ட வெள்ள மேலாண்மை குழுவினை அமைத்து உத்தரவிட்டார்.

அந்தக் குழுவானது மழைநீர் தேங்கியபகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் நிரந்தர தீர்வுக்காண வேண்டிய பணிகள் என பல்வேறு ஆலோசனைகளை அக்குழு வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் இராயபுரம், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.186 கோடி மதிப்பீட்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீர்  வடிகால் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் இராயபுரம் மண்டலத்தில் உள்ள சைடன்ஹாம்ஸ் சாலையில் 24.04 மதிப்பிலும், அம்பேத்கார் கல்லூரி சாலை டெமலஸ் சாலை மற்றும் டிக்காஸ்டர் சாலையில் ரூ.22.09 கோடி மதிப்பிலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் சீத்தாம்மாள் காலனி பகுதியில் ரூ. 25.89 மதிப்பிலும், தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் ரூ.2.85 கோடி மதிப்பிலும், பசுல்லா சாலையில் ரூ.21.13 கோடி மதிப்பிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெருவில் ரூ.21.58 கோடி மதிப்பிலும், அசோக்நகர் 18 வது நிழற்சாலையில் ரூ. 6.88 கோடி மதிப்பிலும், பராங்குசபுரம் பகுதியில் ரூ.9.15 கோடி மதிப்பிலும் முனுசாமி சாலையில் ரூ.15.16 கோடி மதிப்பிலும், கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் ரூ. 27.17 கோடி மதிப்பிலும் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ஒப்பம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ரூ.176.94 கோடி ஒப்பந்த பணிகளுக்கான பணிஆணைகள் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் அரசுமுதன்மைச்செயலாற் மற்றும் மெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் க்கன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் ஒப்ந்த தார ர்களுக்கு நேற்று மார்ச் 14-2022 அன்று வழங்கப்பட்டுள்ளது.இந்தப்பணிகளை உடனடியாக தொடங்கி வருகின்ற பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டுமென ஒப்பந்த தார ர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை, இரயபுரம்,திருவிக. நகர்,அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம் பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் உலக வங்கி நிதிவுதவியுடன் ரூ. 119.93 கோடி மதிப்பில் 45 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், புளியந்தோப்பு பகுதியில் ரூ.7.40 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஏற்கனவே நடைப்பெற்று வருகிறது. என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் பணிகள் எம்.எஸ்.பிரசாந்த், தலைப்பொறியாளர் பொது எஸ் ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here