கலி:
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வல்லே டெல் கயூகா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 2.19 மணியளவில் பூமி குலுங்கியது.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்தனர்.
நிலநடுக்கம் 6.1 ரிக்டரில் பதிவாகியுள்ளது. வல்லே டெல் கயூகாவில் உள்ள எல் டோவியா நகருக்கு அருகே பூமிக்கு அடியில் 113.3 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் காயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் நிலநடுக்கம் வல்லே டெல் கயூகா மாகாண தலைநகர் கலியில் உணரப்பட்டது.
எனவே அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.