ராமநாதபுரம், மார்ச் 26-
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கலில் மார்ச் 25ம் தேதி வரை 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தேதியில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் தேர்தலில் போட்டியிடுவோர் மார்ச் 19ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுதாக்கல் மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் மார்ச் 19ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் விபரம் வருமாறு:
மார்ச் 19_ விநாயக மூர்த்தி – சுயே,
மார்ச் 20- தாக்கல் இல்லை
மார்ச் 21- லோகநாதன்
(முற்போக்கு சமாஜ்வாதி)
மார்ச் 22 புவனேஸ்வரி (நாம் தமிழர்),
கலைஜோதி
(நாம் தமிழர் மாற்று) ,
வைர சீமான் (சுயே)
மார்ச் 25
எம்.முத்து(சுயே),
ஆர்.ஜெயபாண்டி (சுயே),
நயினார் நாகேந்திரன் (பாஜக),
கருப்பசாமி (சுயே) -திருச்சுழி
கேசவ் யாதவ் (பூர் வாஞ்சல் ஜனதா கட்சி),
கே.பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ் கட்சி),
கே.அசன் அலி (சுயே),
கே.ஜவஹிர் அலி (சுயே),
கருப்பசாமி (சுயே – -நெல்லை ,
கே.நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வீரராகராவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.