பாராளுமன்றத் தேர்தலில் சமஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் போட்டியிடுகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அகிலேஷ் யாதவ் அஸம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் ராம் கோபால் யாதவ், அசம் கான், டிம்பிள் யாதவ், ஜெயா பச்சன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முலாயம் சிங் பெயர் இடம் பெறவில்லை.