pic: FILE COPY

திருவள்ளூர், செப். 06 –

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் நிலையங்களில் கடந்த 31 ந் தேதி அன்று முதல் கடந்த 4 ந் தேதி வரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலக்காத்தில் மோட்டார் சைக்கிள், மூன்று சக்கர வாகனம், நான்கு  சக்கர வாகனம், என மொத்தம் 264 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த ஏலத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்,கலால் உதவி ஆணையர் பரமேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் மோகன், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, கீதா லட்சுமி, பத்மஸ்ரீ, பப்பி, அன்புச்செல்வி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக ஏலம் எடுக்க திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 5 நாட்களில் மொத்தம் உள்ள 264 வாகனங்களில் இரு சக்கர வாகனம் 3,  மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனம் 172 என ரூ.38 லட்சத்து 57 ஆயிரத்து 160 க்கு ஏலம் விடப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here