ஆண்டிப்பட்டி அருகே இளையோர் தலைமைப் பண்பு, சமூக மேம்பாட்டு பயிற்சி முகாம் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் திட்ட விளக்கவுரை ஆற்றினார்

0
209

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேனி நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் தலைமை பண்பு மற்றும் சமூக மேம்பாட்டு பயிற்சி மூகாம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் அ.சுந்தரமாகலிங்கம் திட்ட பயன்பாடுகள் பற்றி விரிவுரை ஆற்றினார்.
அவரைத் தொடர்ந்து நேரு யுவகேந்திரா திட்டங்கள் பற்றி NY K கணக்காளர் ஸ்ரீராம்பாபு , தகவல் தொடர்பு பற்றி பயிற்றுனர் தங்கவேல், தலைமைப் பண்புகள் பற்றி அமுதா, வாழ்க்கை திறன் பற்றி NY K பாண்டி, பாரத பிரதமரின் கனவு திட்டங்கள் மத்திய அரசு வழக்கறிஞர் K. குமார், மது போதை மறு வாழ்வு பற்றி அரசு மருத்துவர் ஜெயசீலி , தூய்மை இந்தியா பற்றி சமுதாய வளர்ச்சி அலுவலர் M.முருகன் ஆகியோர் விளக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.முகாமிற்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திரா கணக்காளர் K ஸ்ரீராம்பாபு வரவேற்புரை நிகழ்த்த, நன்றி உரையினை தேசம் இளைஞர் மன்றம் P. அருள் மொழி வர்மன் நிகழ்த்தினார். இம் முகாமிற்கு ஏராளமான இளையோர் மன்றங்கள், பொது மக்கள்,கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு பயனுள்ள பயிற்சி முகாம் இது வென கூறினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here