செங்கல்பட்டு, மே. 15 –

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திராசிட்டி பகுதியில் போலீசார் வாகான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி பிடித்து வாகனத்திற்க்கான ஆவணத்தை காட்டும் படி போலீசார் கேட்டுள்ளனர். வாகனத்திற்கான ஆவணம் இல்லாததாலும், மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக  தகவல் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து,

இளைஞரை மறைமலைநகர் காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அந்த இளைஞன் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே உள்ள வீராபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மாரி (38) என்பவரின்  மகன் சத்யா (22) என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் சத்யா அப்பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  அதனைத் தொடர்ந்து, சத்யா திருடிய விலையுர்ந்த ஐந்து இரு சக்கர வாகனங்களை செங்கல்பட்டு அருகேவுள்ள புலிப்பாக்கம் வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து போலீசார் அவ்வனப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்த, ஐந்து இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து வந்தனர். மேலும் சத்யா பயன்படுத்தி வந்த ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் சத்யா மீது வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்

 

மேலும் சத்யாவிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சத்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட இருசக்கர வாகானங்கள் பல்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அதன்படி, மறைமலைநகரில் திருடு போன இரண்டு இருசக்கர வாகனங்கள், மாமல்லபுரத்தில் திருடு போன இரண்டு இருசக்கர வாகனங்கள், சென்னை அரும்பாக்கத்தில் திருடு போன ஒரு இருசக்கர வாகனங்கள்,  சட்ராஸ் பகுதியில் திருடு போன ஒரு இருசக்கர வாகனங்கள் என ஆறு இருசக்கர வாகனங்களை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் பொரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மூதாட்டியை கொலை செய்து நகை திருடிய வழக்கிலும் சத்யா கைதாகி உள்ளார் என காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here