சோழவரம், ஜூன். 21 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்திற் குட்பட்ட ஆமூர் கிராமத்தில் அமைந்துள்ள எட்டாம் வகுப்பு வரை இயங்கும் அரசு நடுநிலை பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தினுள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி. தலைமை வகித்தார். .ஆசிரியர்கள் யோகேஸ்வரி. யோகசுந்தரி. உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி வட்டார வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் நாகமணி கலந்துகொண்டு மாணவர்களிடையே யோகாசனம் குறித்து எடுத்துரைத்து செயல் முறை விளக்கங்களையும் அளித்தார். இதில் திரளான மாணவர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here