பூவிருந்தமல்லி, மே. 9 –

ஆவடியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில், இருந்த போது மாடியின் அருகே தொங்கிக் கொண்டிருந்த தென்னை ஓலையை இழுத்த போது, அவர் கால் தடுமாறி கீழே விழுந்து அப் பெண் பலியானார். அதனால் அப்பகுதியில் பெருத்த நோகம் நிலவி வருகிறது.

ஆவடி காமராஜ் நகர் முத்துக்குமரன் தெருவில் வசித்து வருபவர் ஆனந்தன்  இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 35) இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது என தெரிய வருகிறது.மேலும் இவர்களுக்கு . 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று அவர்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்ற புவனேஸ்வரி, அவர்கள் வீட்டு மாடியருகே இருந்த தென்னை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த தென்னங்கீற்றை அப்புறப்படுத்த நினைத்து அதை பிடித்து இழுத்துள்ளார். அப்பொழுது அவர் நிலை தடுமாறி, மொட்டை மாடியிலிருந்து  கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் கீழே விழுந்த புவனேஸ்வரிக்கு தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் கீழே விழுந்த சத்தம் கேட்டு அவரது மகன் வந்து பார்த்த பொழுது புவனேஸ்வரி தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்துள்ளார்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தந்தை ஆனந்தனுக்கு  தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வீட்டிற்கு வந்த ஆனந்தன் உடனடியாக படுகாயம் அடைந்த மனைவி  புவனேஸ்வரியை  ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

தொடர்ந்து, அங்கு புவனேஸ்வரிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அம்மருத்துவமனையில் புவனேஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், புவனேஸ்வரி  வரும் வழியிலேயே இறந்து  விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து ஆவடி காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்குதியில் பரபரப்பையும் பெருத்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here