மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
கர்நாடாக அரசு மேகதாட்டில் அணை கட்டுவதற்கு திமுக அரசு துணை போவதை கண்டித்து போராட்டங்களை தீவிர படுத்துவோம் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழக அனைத்து காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது . காவல்துறையையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டு சுப்கரசிங் என்கிற 24 வயது இளைஞன் மோடி அரசு படுகொலை செய்து இருக்கிறது.
அதனைக் கண்டித்து அவருடைய அஸ்தியை வருகின்ற எட்டாம் தேதி காலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அஸ்தி வந்தடைகிறது அதனைப் பெற்று சென்னை மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் எழும்பூர் , தியாக நகர் , வடபழனி , கிண்டி , சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சென்று கடைசியாக மாலை 5 மணிக்கு பெசன்ட் நகரில் அவரது அஸ்தியை வங்கக் கடலில் கரைக்க இருக்கிறோம்.
இந்த நிகழ்வில் ஐயா கண்ணு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள் பொதுமக்களும் அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள் நிறைவாக பெசன்ட் நகர் கடற்கரையில் மாலை 6 மணிக்கு நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதற்கான வகையில் காவல்துறையில் அனுமதி கேட்டு திட்டமிடப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அஸ்தியை கரைப்பது என முடிவெடுத்து இருக்கிறோம். தமிழ்நாடு அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதற்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற 18 வது கூட்டத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஆணையம் மத்திய அரசை அனுமதி கோரி வரைவு திட்ட அறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் டெல்லியில் நடைபெற்ற 19வது ஆணைய கூட்டத்தில் அதனை நிராகரிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசை கேட்டிருந்தோம் அது குறித்து வாய் திறக்காமல் கூட்டம் முடிவடைந்து இருக்கிறது . எனவே மறைமுகமாக திமுக மேகதாட்டு அணை கட்டுவதற்கு துணை போவது என்பது வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டிருக்கிறது. அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் . எனவே வெகு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேகதாட்டில் அணை கட்டுவதற்கு ஆணையம் எடுக்கும் தீர்மானங்கள் குறித்து வழக்கு தொடர இருக்கிறோம் எனவும், தமிழ்நாடு திமுக அரசு மேகதாட்டில் அணை கட்டுவதற்கு துணை போவதை கண்டித்து போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என பிஆர் பாண்டியன் அப்போது தெரிவித்தார்.