மீஞ்சூர், ஜூலை. 15

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா  பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அன்பு மலர் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், (கிராம ஊராட்சி) சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், தேசிய அனல் மின் நிலைய நிர்வாக இயக்குனர் ராஜேஷ் குமார் சட்டோபாத்யாய் உள்ளிட்டவர்கள் பங்கேற்று புதிய பள்ளிக்கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

அவ்வுரையின் போது இப்பள்ளிக் கட்டடத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா அன்று திறந்து வைப்பதில் தாங்கள் மற்றற்ற மன மகிழ்ச்சிக் கொள்வதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். மேலும் பெருந்தலைவர் கல்விக்காக ஆற்றிய பெருந் தொண்டினை நினைவுக் கூர்ந்து உரை நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து அவர்கள் இப்பள்ளியில் கல்விப் பயிலுகின்ற மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் மீஞ்சூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அத்திப்பட்டு டி.புருஷோத்தமன் செய்திருந்தார் மேலும் சிறப்பூட்டும் விதமாக கர்மவீரரின் பிறந்த தினத்தில் அப்பள்ளிக்கு ரூபாய் 1.லட்சம் மதிப்புள்ள கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் நந்தகுமார் பெருமாள் சக்கரவர்த்தி கந்தசாமி செல்வராமன் உதயராஜா விசிக உதயகுமார் உள்ளிட்ட திரளான கிராம பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளியின் மேலாண்மை குழு துணை தலைவர் திவ்யா அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here