கும்பகோணம், மார்ச். 08 –

திருமங்கலகுடியைச் சேர்ந்தவர் தவறவிட்ட பணம் மற்றும் செல்போனை பேரூராட்சித்தலைவர் மற்றும் செயலர் முன்னிலையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள்.

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பேரூராட்சியில் கல்யாணபுரம் கடைவீதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மலர்கள் சுய உதவிக்குழுவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது திருமங்கலகுடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தவறவிட்ட  29,720 ரூபாய் மற்றும் 2 செல்போன்களையும் உரியவரிடம் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் தலைமையில் ஒப்படைத்தனர்.  அவர்களின் நேர்மையான செயல்பாடுகளை பாராட்டி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆரோக்கிய பிச்சை, ஓட்டுனர் தினகரன் ஆகியோர்களுக்கு  வேப்பத்தூர் பேரூராட்சி பெருந்தலைவர் அஞ்சம்மாள், செயல் அலுவலர் லதா. இளநிலை உதவியாளர் ரமேஷ் குமார் ஆகியோர் அவர்களைப் பாராட்டி  பொன்னாடை போர்த்தி கௌரவித்த அவர்கள் வறுமையிலும் நேர்மையை கையாண்ட அவர்களை மேலும் மனதார வாழ்த்தினார்கள். பணம் மற்றும் செல்போன்களை தவறவிட்டு பெற்றுக் கொண்ட பாலசுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here