பொன்னேரி, மார்ச். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும் ஒன்றிய அளவிலான துறைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஊள்ளாட்சி பிரதிநிதகளிடம் புகார் தெரிவித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்நிலையில் அதனைக் கண்டிக்கும் வகையிலும் மேலும் உடனடியாக மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கிட வலியுறுத்தியும் அவர்கள் இன்று காலையில் அண்ணாமலைசேரி வழித்தடம் எண்  58K,90A, இரண்டு  அரசு பேருந்தை சிறைப்பிடித்து அக்கிராமப் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மாத காலமாக குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராத உள்ளாட்சி நிர்வாகம் மற்றும்வருவாய் துறை நிர்வாகத்தை அவர்கள் கண்டித்து அக்கிராம மக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

வெகு நேரமாக நடைப்பெற்ற போராட்டம் குறித்து அரசு அதிகாரிகளோ   ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் யாரும் சம்பவ இடத்துக்கு  நேரில் வராததால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கூச்சலி அரசுக்கெதிரான முக்கங்களை எழுப்பினார்கள். அதனால் அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் திருப்பாலைவனம் காவல்துறை  ஆய்வாளர்  சுப்பிரமணி விரைந்து வந்து பொது மக்களிடையே  பேச்சுவார்த்தை நடத்தி,  ஊராட்சி மன்ற தலைவர் டில்லிபாபு உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இரண்டு நாட்களுக்குள் குடிநீர் வழங்கவும், மேலும் தெருவிளக்குகளை சீரமைத்து தருவதாக உறுதியளித்ததின் பேரில் அக்கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here