தஞ்சாவூர், மே. 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை‌யில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி திருக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம் வெகுச்சிறப்பாக இன்றுநடைப்பெற்றது.

தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, இங்கு வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால்     வசிஷ்டேஸ்வரர் கோயில் என  அழைக்கப்படுகிறது.

மேலும் இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி, திருபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறது, அத்தகைய சிறப்பு வாய்ந்த அக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 9 ஆந் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது,

அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை நடைபெற்று இன்று  கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது, வசிஷ்டேஸ்வரர், பெரிய  அம்மன் சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருள, சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்து நந்தி உருவம் பொறித்த கொடியை மேள தாளங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றினர். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here