கேரளாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யா குடும்பத்தாருடன் மதிய உணவு சாப்பிட்டு அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.

 

திருவனந்தபுரம்:

 

சமீபத்தில் 2018-ம் ஆண்டு நடைப் பெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா (22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

 கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந் நிலையில், கேரளாவில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யாவை இன்று நேரில் சந்தித்தார். வயநாட்டில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஸ்ரீதன்யா குடும்பத்தினரை வரவழைத்து, அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.  அப்போது அவர் ஸ்ரீதன்யாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here