காஞ்சிபுரம், டிச. 01 –

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது

இத் தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த உத்திரமேரூர் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த ரதி – (31)  மற்றும் புனிதா – (51)  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 9 – பேர் பலத்தகாயங்களுடன் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

படூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து செல்லும் போது சிறுமயிலூர் எனும் இடத்தில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here