காஞ்சிபுரம், ஆக. 05 –
காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் அருகே நேற்றிரவு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் சேகர் மீது மோதுவது போல் ஆட்டோவை ஓட்டிச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதனை தொடர்ந்து ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து மீண்டும் போக்குவரத்து பணியில் இருந்த தலைமை காவலர் சேகரை ஆட்டோ ஓட்டுநர்கள் கற்கல் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதனை தொடர்ந்து காயமடைந்த தலைமை காவலர் சேகர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக தலைமை காவலர் சேகர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கஞ்சா போதையில் இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் முகமதுசாதிக் மற்றும் தீபக் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.