திருவாரூர், செப். 24 –

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது அத் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாவட்ட காவல்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை பசுமை இயக்கத்தின் சார்பில் 200 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு அதற்கான மரக்கன்று நடும் நிகழ்ச்சி அவ்வளாகத்தில் இன்றைய தினம் நடைப்பெற்றது. அத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மேலும் இதுப்போன்ற மரம் நடும் பணிகள் தமிழ்நாடு வனத்துறை பசுமை இயக்கத்தின் சார்பில் இம்மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சுமார் 4 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற உள்ளதாக தகவல் தெரியவருகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார். மாவட்ட அலுவலர் அறிவொழி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் என திரளானவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here