பொன்னேரி, ஏப். 18 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அருள்மிகு திரு அகத்தீஸ்வரர் திருக்கோயிலும், அருள்மிகு திரு கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது.

மேலும் இவ்விரு திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கமாகயிருந்து வருகிறது.

மேலும் அதனைத்தொடர்ந்து அருள்மிகு திருகரிகிருஷ்ண பெருமாள் திருத்தேரோட்டமும், அரணும், ஹரியும் சந்திக்கும் சந்திப்பு பெருவிழாவும் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் ஆண்டுதோறும் நடைப்பெறும் அத்திருத்தேரோட்டத்தில் தேர் அலங்காரத்திற்கு உபயோதாரர்களாக பொன்னேரி பகுதியைச் சார்ந்த வியாபாரிகள் சங்கத்தினர் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஆண்டு நடைபெறும் இத்திருக்கோயிலின் திருத்தேரோட்ட விழாவிற்கான தேர் அலங்காரத்திற்கு வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கத்தினருக்கும், விக்கிரம ராஜா தலைமையிலான தனி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சங்கத்தினருக்கும் தேர் அலங்காரத்தை யார் செய்வது என்பது குறித்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனை இரு பிரிவு வியாபாரி சங்கங்களுக்குள் மோதலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கிவுள்ளதால், இவ்விவகாரம் குறித்து தகவலறிந்து பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் இரு பிரிவினருக்கிடையே சமரச பேச்சு வார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் வெள்ளையன் மற்றும் விக்ரம ராஜா தரப்பினர் தேர் திருவிழாவில் உபயோதாரர்களாக யார் இருப்பது என்பது குறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருக் கட்டத்தில் விவாதம் இரு தரப்பினரால் சட்ட ஒழுங்கு பிரச்சினை எழவிருந்த சூழலில் இரு தரப்பினரும் அக்கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் அதனைத்தொடர்ந்து, வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் பொன்னேரி காவல்நிலைய ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் அவ்வாலய செயல் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.

மேலும் அக்கூட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் நடத்தும் திருவிழா இதில் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது. எனவும் மேலும் வியாபாரிகள் சங்கங்கள் இதற்கு உரிமை கோரமுடியாது எனவும், மேலும் இருதரப்பினரும் ஒன்று சேர்ந்து உபயதாரர்களாக தேர்விழாவை நடத்த வேண்டும் அல்லது ஆலய நிர்வாகமே இவ்விழாவினை எடுத்து நடத்த வேண்டும் என முடி வெடுக்கப்பட்டு இரு சங்கத்தினரிடம் வட்டாட்சியர் தெரிவித்தார்.

மேலும், அம்முடிவிற்கு விக்ரமராஜா தரப்பினர் ஒத்துக்கொண்ட நிலையில் வெள்ளையன் தரப்பினர் முடிவெடுக்க அவகாசம் கேட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here