சென்னை, ஏப். 20 –

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் ஆமைகளை பாதுகாக்கும் (Tree Foundation) ட்ரீ பவுண்டேஷன் எனும் தனியார் தொண்டு நிறுவனம் டாக்டர் சுப்பரஜா தாரணி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்களில் ஒருவரான மீனவர் சக்கரவார்த்தி (55) கூவத்தூர் அடுத்த பழையநடு குப்பத்தில் கடந்த ஜனவரி 21ம் தேதி தனது சக மீனவர்களுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது சுமார் ஐந்து நாட்டிகள் மைல் தூரம் சென்றதும் அங்கு கோஸ்ட் நெட் (GHOST NET) எனப்படும் சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட ராட்சத மீன்பிடி வலையில் ஆலிவ் ரிட்லி எனப்படும் சிறிய ரக கடல் ஆமை ஒன்று சிக்கியிருப்பதை கண்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி தவித்த ஆமையை விடுவித்து தன்னுடைய நண்பர்களின் உதவியோடு நீலாங்கரையில் உள்ள தன்னார்வ நிறுவனத்திடம் அதனை ஒப்படைத்துள்ளனர். தற்போது ஐந்து வயதான ஆமை சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்த ராட்சத வலையில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆமையின் முன்புற வலது பக்க துடுப்பு மற்றும் தொண்டை பகுதிகள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு ராட்சத வலையினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஆமையின் முன்பக்க வலது துடுப்பு முழுவதுமாக நீக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சகி என்று பெயரிடப்பட்டுள்ள ஆமை சிகிச்சையில் பூரண குணமடந்ததை தொடர்ந்து இன்று தன்னார்வலர்களால் படகு மூலம் இரண்டு நாட்டிகள் மைல் தூரம் கடலுக்குள் சென்று விடப்பட்டது. ஒரே ஒரு முன்பக்க துடுப்பு இருந்தாலும், கடலில் விட்டதும் உற்சாகத்துடன் நீந்திய ஆமை தன்னாரவலர்களிடம் இருந்து விடைபெற்று சென்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here