கும்பகோணம், அக். 24 –

இன்று கும்பகோணம் அருகே உள்ள நவகிரக கோவில்களில் ஒன்றாகவும் ராகு பகவான் பரிகார ஸ்தலமாகவும் விளங்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் காலை 10.30 மணியளவில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

இதற்கான திருப்பணிகள் ரூ. 5 கோடி செலவில் நடைப்பெற்று. அதன் பின் கடந்த (21-ம் தேதி) மாலை முதலாம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாரதனையும் தொடங்கப் பட்டு, நேற்று 22-ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நேற்று 23-ம் தேதி 4 மற்றும் 5 ம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் இதற்காக இத் திருக்கோயிலில் 22,500 சதுர அடியில் அமைக்கப்படிருந்த யாகசாலையில் 108 குண்டங்கள் அமைக்கபட்டு 250 சிவாச்சாரியார்களும் 40 ஓதுவார்கள் பங்கேற்று நடைப்பெற்று வந்தது. யாக பூஜைகள் இன்று முடிவுப் பெற்று, காலை காலை ஆறு மணிக்கு இவ்வாலயத்தில் உள்ள பரிவார தேவதைகளுக்கு குடமுழுக்கு நடைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 10.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் தேவார திருவாசகம் இன்னிசை மேளதாளங்கள் சிவ வாத்தியங்களுடன் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை யாக குண்டத்தில் இருந்து புறப்பட்டு கோயிலில் உள்ள ஏழு ராஜ கோபுரங்கள் மற்றும் கோயிலின் மூலவர் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.

இத்திருக் கோயிலின் மகா கும்பாபிஷேக பாதுகாப்பிற்கு, 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப் பட்டனர். மேலும் தீயணைப்பு துறை வருவாய்த் துறை இந்து அறநிலையத் துறை சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சைவ ஆதீன மடாதிபதிகள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு நவக்கிரக கோயில்களில் ஒன்றான ராகு பகவான் பரிகார தலமாக விளங்கும் தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை சமேத நாகநாதசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு சிற்பாக நடைப்பெற்றதின் மகிழ்ச்சி அவ்வூர் மக்களிடம் பிரதிப்பலித்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here