கும்பகோணம், ஜன. 23 –

     இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் வழிபாட்டு திருத்தலங்கள் எல்லாம் மூடியிருந்த நிலையில், உறவினர்கள் 10 பேர்களுடன் சுவாமிமலை திருக்கோயில் முன் எளிமையாக புதுமண தம்பதியர்களின் திருமணம் நடந்தது.

     கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தை மாதம் திருமணங்கள் அதிக அளவில் நடக்கும் சூழ்நிலையில்,  இன்று பூரண ஊரடங்கு நடைபெற்று வருவதால், ஏற்கனவே நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், நெருங்கிய உறவுகள் ஒரு சிலருடன் மட்டும் எளிமையாக  நடைபெற்று வருகிறது. இன்று காலை கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயம் முன்பு துறையூரை சேர்ந்த தினேஷ் ராஜ் என்பவருக்கும், மன்னார்குடியை சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் எளிமையான முறையில் 10 நபர்கள் மட்டும் பங்கேற்ற திருமணம் 10 நிமிடங்களில் சிறப்பாக நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here