செங்கல்பட்டு, ஏப். 26 –
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் உள்ள செடி, கொடிகளில் திடிரென தீப்பற்றி எரிந்தது.
மேலும் இதுக்குறித்து உடனடியாக அப்பகுதி வாசிகள் செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் சுமார் 200-மீட்டருக்கும் மேலாக செடிகள் தீ பற்றி எரிந்ததால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அந்நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானர்கள். மேலும், இன்று காலை முதல் கடுமையாக அடித்த வெயிலின் காரணமாக அச்செடி கொடிகளில் ஏற்பட்ட உராய்வினால் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.




















