சென்னை:

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையைக் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணிநேரம் நடைபெறும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here