நன்னிலம், ஏப். 08 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் ஈரல் பசி தீர்க்கும் அறக்கட்டளை மற்றும் நன்னிலம் திமுக இளைஞரணி சார்பில் ஏப்ரல் – 4 ல் பிறந்த நாள் விழா கண்ட திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் அப்பகுதி திமுகவினர் அன்பாக மனுநீதிசோழன் என்றழைப்பவருமான, மேலும் திமுக தொண்டர்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய அவர்களது பாசமிகு அண்ணனுமான பூண்டி.கே.கலைவாணன் பிறந்தநாள் விழாவினை  முன்னிட்டு அப்பகுதி வாழ் ஏழை எளியவர்கள் 50 க்கும் மேற்பட்ட மகளிர்க்கு புடவைகள் வழங்கி அப் பிறந்த நாள் விழாவினை கொண்டாடினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் நன்னிலம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பனங்குடி ஏ.எஸ்.குமார் அந்நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here