திருவாரூர், ஏப். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…

திருவாரூர் மாவட்டத்தில் காலையிலேயே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் சொந்த ஊரில் வாக்கினை  செலுத்தி சனநாயக கடைமையாற்றினர். இருந்த போதிலும் மாவட்டம் முழுவதும் மந்தமாக இருந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் ஆர்வமின்மையை காட்டுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருவாரூர் மாவட்டத்தில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினம் என மொத்தம் 10,46,478 வாக்காளர்கள் உள்ளனர்.  திருவாரூர் மாவட்டத்தினை பொறுத்தவரை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதியிலும், மன்னார்குடி சட்டமன்றத்ததொகுதி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியிலும் உள்ளடங்கியுள்ளது.

வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1183 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 1183 வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய 1183 வாக்கசாவடிகளில் 72 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக மத்திய காவல் படையினர் மற்றும் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 770 வாக்குசாவடி மையங்களில் வெப்கேமரா பொறுத்தப்பட்டு இணையவழி வாயிலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை மட்டுமன்றி மாநில தேர்தல் கட்டுப்பாட்டு அறைமூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மாவட்டம் முழுவதும் காலையிலேயே வாக்குசாவடிகளில் வாக்காளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படுவதால் வாக்களிக்க ஆர்வமின்மையே காட்டுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here