திருத்தணி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் அமைந்துள்ள யாசினி பெட்ரோல் சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் முரளி என்பவரின் மகன் கார்திக் வயது 17 இவருக்கு பங்க் உரிமையாளர் அம்முக்குட்டி என்பவர் போன் செய்து வசூல் பற்றி சம்பவ நாளான பிப் 27 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கேட்கும் போது, கார்த்திக் அலரல் சத்தத்துடன் வசூல் பணத்தை முகம் தெரியாத படி முகமுடி அணிந்து கொண்டு இருவர் தன்னிடம் இருந்து பறித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உரிமையாளர் அம்முக்குட்டி பங்க் மேலாளர் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் வசிக்கும் ராமலிங்கம் என்பவரின் மகன் புருஷோத்தமன் வயது 72 என்பவரை இரவு 11 மணிக்கு தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கார்த்திக் கூறிய விசயங்களை அவரிடம் தெரிவித்து என்வென்று பார்க்க சொல்லியிருக்கிறார். புருஷோத்தமன் கார்த்திக்கிடம் விசாரித்தபோது அவரிடமும் கார்த்திக் முகமுடி அணிந்து கொண்டு இருவர் தன்னிடம் வசூலான பணம் ரூ.52, 124 பறித்துச் சென்றதாக கூறியுள்ளார். அத்தகவலை உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டு திருத்தணி காவல் நிலையத்தில் மேற்கூறியபடி புகார் மனுவில் தெரிவித்ததைத் தொடர்ந்து போலீசார் அப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பெட்ரோல் பங்க் ஊழியர் கார்த்திக், சதீஷ்குமார் என்பவரின் மகன் பிரவின்குமார் வயது 18 மற்றும் வீரா என்பவரின் மகன் குரு வயது 19 ஆகிய மூவரும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிப்பதும், இச்சம்பவத்தில் திட்டமிட்டும் நாடகமாடியும் பெட்ரோல் பங்க் பணத்தை கையாடல் செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.45 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றி அவர்கள் மூவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.