திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் வருடம் வாசு என்பவர் அரசு பேரூந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் அவர் மீதான குற்றம் அரசு தரப்பில் நிருபிக்கப் பட்டதால், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் ஒராண்டு சிறைத் தண்டனையும்,ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.    

 திருவள்ளூர்; அக்.14-

திருவள்ளூர்  மாவட்டம்  திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணசமூத்திரம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் வாசு   என்பவர் கடந்த 2014-ம் வருடம் அரசு பேருந்து எண்.   TN 21 N 1040 தடம் எண். 212 F பொதட்டூர்பேட்டை வழியாக திருத்தணி சென்ற வாகனத்தின் பின்பக்க கண்ணாடியை கல் எரிந்து சேதப்படுத்தியது சம்மந்தமாக அவர் மீது திருத்தணி காவல் நிலையத்தில் குற்றவியல் எண்;  132/2014  படி இந்திய தண்டனை சட்டத்தின் கீழ்  147,109 பிரிவுகளில் r/w 2&3 of TNPPDL  வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  இவ் வழக்கின் சாட்சிகளை விரைந்து ஆஜர் படுத்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன். உத்தரவிட்டு திருத்தணி உட் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முயற்சியால் வழக்கில் சாட்சிகள் முறையாக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது. மேலும் இவ்வழக்கில் இன்று அக்.14-2019 அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம்குமார்  வாதிட்டார். அதனைத் தொடர்ந்து இவ் வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு இவ் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு எதிரி  வாசுவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் . 5,000 /  ( ஐந்தாயிரம் ) அபராதம் விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here