ஆவடி,நவ. 17 –

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரங்களில் ஏற்பட்ட கன மழையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை சந்தித்த நிலையில்,

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிகப்பு அலார்ட் கொடுத்துள்ளது. இதனால் இம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன்  கனமழை முதல் மிககன மழையும் ஒருசில இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சிகப்பு அலார்ட் எதிரொலியாக போக்குவரத்து சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மரங்கள் சிக்னல் கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஆவடி நகர போக்குவரத்து காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்றுப் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்களை சீர் செய்யும் பணியை ஆய்வாளர் கோதண்டம் தலைமையில் பணிகள் மேற் கொண்டு வருகின்றனர். ஆவடி செக்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள சிக்னல் கம்பங்களை சிமெண்ட் ஜல்லி கற்கள் கொட்டி சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர் குறிப்பாக தமிழக வானிலை அறிக்கை தெரிவித்துள்ள இன்றும் 17ம் தேதி நாளை 18ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிப்பு வந்த நிலையில் போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டம் தலைமையில் பணிகள் சீர் செய்து  வருகின்றனர். இந்த சீர் செய்யும் பணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கர் உமாபதி கோபால் மற்றும் தலைமை காவலர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here