பொன்னேரி, நவ. 27 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்த நாள் விழாவினை வழக்கறிஞர்கள் மிகவும் உற்சாகத்துடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்கள்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் திமுக மூத்த வழக்கறிஞர் ஐசக் சாமுவேல்,மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் அசோக் குமார்,மாவட்டத் துணை அமைப்பாளர் கோளூர் மூர்த்தி, உள்ளிட்ட திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.