திருவள்ளூர், ஜூன். 08 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கோடைகால விளையாட்டு பயறிசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்துப் பேரணியில் பங்கேற்றார்.
திருவள்ளூர் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்த வேளையில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுகின்ற வேளையில் மாணவர்களிடையே போதைப்பழக்கத்தை தடுக்க வேண்டும். மொபைல் போனுக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் விளையாட்டிற்கான முக்கியத்துவத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையிலும், அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் மொத்தம் 200 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் கடந்த 15 தினங்களாக நடைப்பெற்று வருகிறது.
இந்த விளையாட்டு பயிற்சிகளை பொருத்த வரையில் முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் இந்த பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருகிறார். இந்த பயிற்சி முகாமை பொறுத்தவரையில் கடந்த 15 நாட்களாக தடகளம், கால்பந்து மற்றும் கபடி ஆகிய இந்த மூன்று விளையாட்டுகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. தற்போது நடைப்பெறும் இந்த 15 நாட்கள் பயிற்சிக்கு பிறகு ராமன் விஜயன் அடுத்த ஒரு வருடத்திற்கு பயிற்சி அளிக்க தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாணவர்கள் விளையாட்டு வீரர்களாக வருவதற்கும் அதேச் சமயம் போதைப் பழக்கம் மொபைல் போனுக்கு அடிமையிலிருந்து விலகியிருப்பதற்கும் இந்த விளையாட்டு பயிற்சி முகாம் உதவிக்கரமாக மாணவர்களுக்கு இருக்கம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெருவித்தார். மேலும், இந்த முகாமிற்கு கடந்த 15 நாட்களாக வந்திருந்து சிறப்பாக நடத்திக்கொடுத்த முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீர்ருக்கும் அவரது குழுவினருக்கும் மாவட்ட சார்பாக ஆட்சியர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியானது, மாவட்ட ஆட்சியரகம் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக தேரடி வீதி சென்று திரும்பவும் மாவட்ட ஆட்சியகரகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டு விளையாட்டை ஊக்குவித்தல் மது மற்றும் போதை பழக்கத்தை ஒழித்தல், உடல் ஆரோக்யத்தை பேணிக் காத்தல் உள்ளிட்ட பால்வேறு வாசகங்கள் நிறைந்த பதாகைகளை கையிலேந்தி விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கங்களை எழுப்பியவாரே சென்றனர். இவ்விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், மாவட்ட உடற்பயிற்சி கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன், உடற் கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.





















