pic file copy

கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆமூர் கிராமம் கம்மலர் தெருவில் வசித்து வருபவர் சின்னப்பன் என்பவரின் மகன் தரணி வயது 43 இவருக்குக்கு கரண் எனும் மகன் வயது 21 உள்ளார்.

சம்பவ நாளான பிப் 27 ஆம் தேதி கரண் தனது நண்பர்களோடு தேர்வழி கிராமத்தில் உள்ள தினேஷ் என்பவரின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் அங்கிருந்து நண்பர்கள் மகேஷ், தினேஷ், மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் கரண் தேர்வழி கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோயில் அருகே உள்ள துரை ரெட்டியார் என்வரின் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, சுமார் மதியம் 3.30 மணியளவில் கரண் கிணற்றில் உள்ள நீரில் மூழ்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினரை வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் கரணை மீட்டபோது அவர் இறந்து விட்டது, தெரியவந்தது. என கரணின் தகப்பனார் தரணி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அப்புகார் மனுவில் தனது மகனின் உடல் பொன்னேரி அரசு பொதுமருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு முடிந்து சவக்கிடங்கில் உள்ளதாகவும் தனது மகனின் உடலை எங்கள் குல வழக்கப்படி அடக்கம் செய்யவேண்டியுள்ளதால் மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுத் தரும்படி அதில் குறிப்பிட்டுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here