பொன்னேரி, ஜூலை. 20 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் பல்வகை சேவை திட்டம் தொடக்கம் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான சண்முகசுந்தரம் கலந்துக்கொண்டு 1221 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம், மினிலாரி பால் வாகனம், ஜே.சி.பி.இயந்திரம், சிறு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி என சுமார் 12 கோடியே 4 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண்மை இயக்குனர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.