தஞ்சாவூர், மார்ச். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்..

இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், நிகழாண்டு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாகக் குறைந்துள்ளது. எனவும், ஒரு பள்ளிக்கு 1 அல்லது 2 மாணவர்கள்தான் பங்கேற்கவில்லை என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக அப்போது தெரிவித்தார்.

மேலும் அதற்காக ஒவ்வொரு உயர் அலுவலர்களும் முயற்சி எடுத்தனர். கெரோனா  காலத்தில் பள்ளிக்கு குழந்தைகள் வராத நிலையிலும், அதன் பிறகும் கல்வியில் நாட்டம் செலுத்தாத குழந்தைகளுக்கும் சேர்த்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. கல்வி முறையிலிருந்து குழந்தைகள் வெளியில் சென்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

கடந்த ஆண்டு பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களையும், தேர்வுக்கு முந்தைய ஒரு மாத காலத்தில் தயார் படுத்தியதாகவும், அதைப் புரிந்து கொண்டு சில மாணவர்கள் தேருவு எழுதினர். சில மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. அந்த நிலைமையே மீண்டும் வந்துவிடக் கூடாது நிகழாண்டு முயற்சி எடுத்து கணிசமான அளவுக்குக் குறைத்துள்ளோம் என அப்போது அமைச்சர் தெரிவித்தார்.

வருங்காலத்தில் தமிழக முதல்வரின் திட்டங்களைக் கூறி பள்ளிக்கு வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதியே தொடங்கப்பட்டு விட்டதாகவும், மேலும் அதன் மூலம் அரசு பள்ளிகளில் இதுவரை 25 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத்தெரிவித்தார்.

மேலும், அங்கன்வாடிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3.30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அங்கன் வாடிகளிலிருந்து அரசு பள்ளிகளில் முழுமையாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றவாறும் தெரிவித்தார்.

குழந்தை கடத்தல் என வரக்கூடிய வதந்திகள் உண்மையாகிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அப்போது பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடமும் அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here