திருவாரூர், மே. 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …

திருவாரூர் நகராட்சி சோமசுந்தர பூங்காவில் உணவகம் அமைக்க அனுமதி பெற்ற  இடத்தின் அளவை விட அதிகபடியான இடத்தினை ஆக்கிரமித்துள்ளதாக  திமுக வை சேர்ந்த குத்தகைதாரர் மீது திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவ்விடத்தினை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அகற்றிட வேண்டும் என மேலும் அவர் கோரிக்கை. விடுத்துள்ளார்.

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பனகல் சாலையில் நகராட்சிக்கு சொய்தமான  சோமசுந்தரம் பூங்கா அமைந்துள்ளது. மேலும் அப்பூங்கா அண்மையில் ரூ.40 லட்சம் செலவில் புனரமைகப்பட்டது.  இந்நிலையில் அப் பூங்காவில் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை என ஒரு புறம் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பூங்காவிற்கு வரும் மக்கள் பயன் பெறும் வகையில் பூங்கா வளாகத்தில் உள்ளே கேண்டின் செயல்பட்டு வருகிறது.

திமுகவினரால் டெண்டர் எடுத்து செயல்பட்டு வரும் இந்த கேண்டின் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவு இடம் ஆக்கிரமிக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக பூங்காவிற்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கக்கூடிய பகுதியில் கேண்டீன் உரிமையாளர்கள் துரித உணவுகளை அதே இடத்தில் சமைத்து விற்பனை செய்கின்றனர்.

அதனால் தீ விபத்து ஏற்படும் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது. எனவே உடனடியாக இந்த ஆக்கிரமிப்பை அகற்றி குறிப்பிட்ட அளவிற்கு பாதுகாப்பான முறையில் அந்த கேண்டீன் செயல்பட வேண்டும் என திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் கலியபெருமாள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பூங்கா முழுவதும் குப்பைகள் அகற்றப்படாமலும், பாதுகாப்பற்ற முறையில் மின்சார ஒயர்களும் உள்ளன. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பேட்டி: கலியபெருமாள் – திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here