திருவண்ணாமலை, செப்.13-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதன்மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள் 4 நகராட்சிகளில் 1004 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் நடந்த கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாமினை மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலர் டி.ஜி.வினைய், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொ) பா.கந்தன், ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.அருணாசலம், தாசில்தார் எஸ்.சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் ஏ.உதயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி, அடி அண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கௌசிகராம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன், ஊராட்சி செயலர் ஆர்.நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here