திருவண்ணாமலை செப்.30-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை, எண்ணெய் ஆலை, வணிகர் மற்றும் வணிக முகவர் ஆகியோர்கள் உரிமம் பெற்று வியாபாரம் செய்திடவும் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு சந்தைக்கட்டணம் செலுத்தி வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்லவெண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிக்கையிடப்பட்ட வேளாண் விளைபொருள் வியாபாரம் செய்யும் அரிசி ஆலை, எண்ணெய் ஆலை, வணிகர் மற்றும் வணிக முகவர் ஆகியோர்கள் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1987 பரிவு 8(1)ன்படி திருவண்ணாமலை விற்பனைக்குழுவில் உரிமம் பெற்று வணிகம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவ்வாறு உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு வேளாண் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1987 பிரிவு 24(1)ன் படி அறிக்கையிடப்பட்ட வேளாண் விளைபொருட்களான நெல், மணிலா, எள், மிளகாய், பருத்தி, வெல்லம், தேங்காய், ஆமணக்கு, வரகு, துவரை, புளி மற்றும் இதர விளைபொருட்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்பவர்கள் அதன் மதிப்பில் ஒரு சதவிதம் சந்தைக்கட்டணம் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வேளாண் விளைபொருட்களை அறிக்கையிடப்பட்ட பகுதியிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல உரிய அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு எடுத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு சந்தைக்கட்டணம் செலுத்தாமலும், உரிய அனுமதிச்சீட்டு பெறாமலும் எடுத்துச்செல்லும் வேளாண் விளைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here