திருவண்ணாமலை மார்.6-

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிழ்சிறுப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ் (21) இவர் திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தைச சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் வெள்ளியன்று சேரன்தாங்கல் கிராமத்திலுள்ள பிள்ளைதந்தாள் கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேசுக்கு தகவல் கிடைத்தது.

  அத்தகவலின் அடிப்படையில் தண்டராம்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளர் தமிழரசி மோகன் வட்டார சமூக நல அலுவலர் அம்சவள்ளி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் ஆகியோர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரிடம் குழந்தைப் பருவத்தில் திருமணம் நடத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக்கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், சிறுமியை மீட்டு திருவண்ணாமலை தனியார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here