கும்பகோணம், டிச. 27 –
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மாணவ ,மாணவியர்கள் பயன்படுத்தும் நோட்டு, பேனா போன்ற எழுதுபொருள் வகைகளுக்கும், கைத்தறி துணி ரகங்களுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே திருபுவனம் வர்த்தக சங்கத்தின் 33 ஆம் ஆண்டு ஆண்டு விழா வணிகர் சங்க தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வணிகர் சங்க துணை தலைவர் ராமலிங்கம் பொருளாளர் குமார் கௌரவத் தலைவர் அய்யான் சங்க ஆலோசகர் ஹரிகிருஷ்ணன் சேகர் மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் மாவட்ட செயலாளர் முருகேசன் மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாணவ மாணவியர்கள் பயன்படுத்தும் பேனா ,நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட எழுதுபொருள் வகைகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அது போல் கைத்தறி துணி ரகங்களுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டார் .
தமிழக முதல்வர் சமீபத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், மஞ்சள் பைகளின் விலைகள் தற்போது 30 ரூ உள்ளது இதனை 5 ரூபாய்க்கு விற்பனைக்கு கொடுத்தால் பிளாஸ்டிக் பைகளை அடியோடு ஒழித்து விடலாம் மஞ்சப்பை 5 ரூபாய்க்கு வணிகர்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை டைமன் ராஜா வெள்ளையன் கேட்டுக்கொண்டார்.
ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து விரைவில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதிக்கு ராணுவ வீரர்கள் இரங்கல் 17 ஆம் ஆண்டு சுனாமி தினத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தை தனி மாவட்டமாக ஆக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை போதிய உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லை மருத்துவமனைக்கு போதிய உபகரணங்களும் மருத்துவர்கள் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.