திருவள்ளூர், மார்ச். 02 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப் பள்ளியில் சுமார் 102 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அப்பள்ளியில் கல்விப்பயிலும் ஆதி திராவிட மாணவ மாணவியர்களுக்கு கல்விக்கான உபகரணங்கள் வழங்கிடும் நலத்திட்ட உதவிக்கான விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில், காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் அப்பள்ளிக்கான மேசை, நாற்காலி, மற்றும் மாணவ, மாணவியர்களுக்குன நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

மேலும் தொடர்ந்து அப்பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இல்லம் தேடி கல்வி குறித்தும், மேலும் வர இருக்கின்ற காலை உணவு திட்டம் குறித்தும் குழந்தைகள் இடத்தில் விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகம், கிராம நிர்வாகி ராஜேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்னாவதி, உதவி ஆசிரியர்கள் இளங்கோ, ரேவதி, அம்பிகா, மோனிஷா உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here