திருவள்ளூர், மார்ச். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம மக்களை சமாதானப் படுத்தும் வகையில் அனுப்பப்பட்ட தற்காலிகமாக குடிநீர் விநியோகம் செய்ய வந்த லாரியையும் அவர்கள் சிறை பிடித்துள்ளனர்.

கடந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் சாலைகள், மற்றும் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தது. அதனால் மிக்ஜாம் புயலில் இருந்து  இன்று வரையில் கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டார் மடம், கடப்பாக்கம் மேல் காலனி, செஞ்சி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து குடிநீர் கிடைக்காததால் கோடை காலம் தொடங்கியுள்ள இந்நிலையில், அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அலைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பிரச்சினைக் குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், புகார் அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர்ரென காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் பொன்னேரியில் இருந்து கடப்பாக்கம் வந்த தடம் எண் 29 பேருந்தை மடக்கி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்,

அத்தகவலறிந்து காட்டூர் காவல்நிலை காவல்துறையினர் கடப்பாக்கம் கிராமத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர். மேலும், கண்துடைப்புக்காக அனுப்பப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வந்த லாரியையும் சிறை பிடித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

காலதாமதமாக வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்களிட்ம பேசி அதனை ஓரிரு நாட்களில் சரி செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர். மேலும் அவர்களின் அப்போராட்டத்தில் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here