சீர்காழி, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும், வேளாண்மை இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வேளாண்மை கடன் முழுவதும் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி இரயில்வே நிலையத்தில் ஐக்கிய விவசாய சங்கத்தினர் கோவி. நடராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலை இடைமறிக்க முயன்றனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னர் உடனடியாக விடுவித்தனர். அதனால் ரயில் நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.