கும்பகோணம், டிச. 19 –

குடந்தை ரத்ததான டிரஸ்ட் நடத்தும் மூன்றாம் ஆண்டு சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் மும்மதத்தினர்  முன்னிலையில் குடந்தை ரத்ததான டிரஸ்ட் அறங்காவலர் ஆசிரியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

அறங்காவலர் யூசுப், நிர்வாக அறங்காவலர் ஷேக் தாவூத், மாநகரத் துணை மேயர் தமிழழகன், மக்கள் தொடர்பு அலுவலர் இயக்குனர் மரியா பிரான்சிஸ்கிஸ்வா, தலைவர் ஜாகிர்உசேன், அன்னை கருணை இல்லம் நிறுவனர் அம்பலவாணன், மகளிர் மருத்துவர் பரிதாபானு, ரெட் கிராஸ் துணைத் தலைவர் ரொசாரியோ, ரோட்டரி ரத்த வங்கி அறங்காவலர்கள் அப்துல் கபூர், சுலைமான் சேட், அரசு மருத்துவமனை இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் சலீம் பாட்சா, ரத்ததானம் டிரஸ்ட் உறுப்பினர் விமலா தேவி ஜோதிமலை, இரைப்பணி திருக்கூடம் நிறுவனர் திருவடிக்குடில் சாமிகள் திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சமூக சேவை ஈடுபட்டு வரும் 34 நபர்கள் மற்றும் தொடர்ந்து ரத்த தானம் வழங்கி வரும் 165 நபர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு அவர்களை கௌரவப் படுத்தினார்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here