திருத்தணி, ஜூன். 28 –
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள். இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர்.
மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை உடன் கொண்டு வந்துள்ளார் அதனை பாதுகாப்பு கருதி பயணத்தின் போது அணியாமல் அவரது கணவர் தனது கால்சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் சுந்தரத்தின் அருகில் அமர்ந்து பயணம் செய்த பயணி ஒருவர், திருத்தணி பைபாஸ் சந்திப்பு பகுதியில் திடீரென்று பேருந்தில் இருந்து இறங்கி ஓடுவதை பார்த்த சுந்தரம் தனது கால்சட்டைப் பாக்கெட்டைப் பார்த்த போது, அது பிளேடால் கிழிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து பையில் இருந்த 7 சவரன் தங்க நகைகள் பார்துள்ளார். அது பிக் பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது அப்போது அவருக்கு தெரிய வந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, தம்பதியர்கள் இருவரும் பேருந்திலிருந்து இறங்கி கூச்சலிட்டு கதறியுள்ளனர். அப்போது சாலையில் நின்றுக் கொண்டிருந்த பொதுமக்கள் நகையை திருடிவிட்டு ஓடிக்கொண்டிருந்த பிக்பாக்கெட் திருடனை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர்.
தொடர்ந்து அவனிடமிருந்து திருடிச்சென்ற 7 சவரன் நகையை மீட்டு, அந்த வயது முதிர்ந்த தம்பதியிடம் ஒப்படைத்துள்ளனர். பின்பு அத்திருடனை செம அடி உதை கொடுத்து திருத்தணி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அத்திருட்டுக் குறித்து அத்திருடனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தம்பட்டம் செய்திக்காக களத்திலிருந்து, திருவள்ளூர் செய்தியாளர் வைஷ்ணவி …