தஞ்சாவூர், மே. 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

பீஸா பர்க்கர் என்ற போன்ற உணவு வகைகளை விரும்பும் தற்போதை தலைமுறையினரை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியாக 1980, 1990  காலகட்டத்தில் தின்பண்டங்களாக இருந்த ஜவ்வு மிட்டாய், எள்ளு உருண்டை, தேன் மிட்டாய், பொரி உருண்டை போன்ற தின்பண்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாப்பிட வைத்து அவைகளின் சுவை உணர வைத்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களின் தமிழனி புலனம் குழுவினர்.

மேலும் அக்குழுவினர் இரவு பெரியக் கோவில் பின்னனியில் ஒன்றாக அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டனர். அதன் மூலம் தமிழ் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் மீட்டெடுக்கப்படும் என்ற தங்களது நம்பிக்கையை அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

தஞ்சையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் இணைந்து தமிழ் வளர்ச்சிக்காக தமிழினி புலனம் என்ற வாட்சப் குழுவை 2019 ஆம் ஆண்டு உருவாக்கி பல்வேறு சமூக மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக 25 பேருடன் தொடங்கிய அக்குழு இன்று 477 பேர்களுடன் சேர்ந்து பயணித்து வருகின்றனர். தமிழ் வளர்ச்சி, தமிழ் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்காக இக் குழு செயல்பட்டு வருவதாக அக்குழுவின் அட்மின் தெரிவிக்கின்றார். மேலும் இந்த குழுவில் தினமும் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக புத்தகங்களை வழங்கி அவர்களுக்கு வாசிக்கும் திறனையும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்காலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. பீஸா பர்க்கர் என்ற காலக்கட்டத்தில் உள்ள சிறுவர்களுக்கு 80, 90 காலக்கட்டத்தில் இருந்த கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, கொள்ளு உருண்டை, சுத்திர மிட்டாய், ஜவ்வு மிட்டாய் போன்ற விஷயங்களை அறிமுகப்படுத்தி இந்த தின்பண்டங்களை அவர்களை சாப்பிட வைத்து 80.90 காலக்கட்டத்தில் சிற்றுண்டி, தானியங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி 2 K கிட்ஸை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியை நாங்கள் செய்து இருக்கிறோம் என்கின்றனர் அக்குழுவினர்.

முத்தமிழை பறைசாற்றும் வகையில் இயல், இசை, நாடகம் நடத்தப்பட்டது. தமிழ் மொழி எவ்வளவு அழகானது, இனிமையானது என்பதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல செய்கிறோம்.

இரவு நிலாச்சோறு சாப்பிட்ட காலங்களை மீட்டெடுக்க பெரியக்கோவில் முன்பு நிலா தோசை வழங்கி நிலவு ஒளியில் கூட்டாஞ்சோறு சாப்பிடுகிறோம்.

தமிழ் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் மீட்டெடுக்கப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. பரிசுப் பொருட்களாக உரம், மரக்கன்று, கும்பகோணம் வெற்றிலை, காபி தூள் வழங்கி சமூகத்தின் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது என்பதை உணர்த்துகிறோம் என்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here