கும்பகோணம், ஆக. 13 –

கும்பகோணம்  போர்ட்டர் டவுன் ஹாலில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா 3 நாட்கள் கொண்டாடப் பட உள்ளது. அதன் முதல் நாளான இன்று சுவாமி விவேகானந்தா விஜய ஜோதி கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கலந்து கொண்டார்.

சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு கடந்த 1897ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருகை தந்த போது அம்மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஒரு உரையின் போது, சுவாமி விவேகானந்தர் எழுந்திருங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்; லட்சியத்தை அடையும் வரை ஓயாது செல்லுங்கள்* என்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், மக்களுக்கும் நரம்பை முறுக்கேற்றும் வகையில் உத்வேகத்தை அளிக்கவல்ல வேதாந்தப்பணி என்ற தலைப்பில் 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுச்சிமிகு உரையாற்றியனார்.

இந்நிலையில், 125 ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில் அவரது திருவுருவச் சிலையை அமைப்பதற்கான பணியை காந்தி பூங்கா எதிரே உள்ள  போர்ட்டர் டவுன்ஹால் மற்றும் தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடம், இணைந்து மேற்கொண்டுள்ளனர். அதற்கான இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து போர்ட்டர் டவுன் ஹாலில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதில் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை  ரயில்வே நிலையத்திலிருந்து போர்ட்டர் டவுன்ஹால் வரை சுவாமி விவேகானந்தா விஜய ஜோதி ஏற்றும் தொடர் ஓட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையிலும், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சுவாமி விமூர்த் தானந்தர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார், தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர்  கயல்விழி, காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா கந்தபுனேனி, மற்றும் கோட்டாட்சியர் லதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு  ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமாரிடம் இருந்து பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் ஆனந்தன்குணசேகரன் விஜய ஜோதியை பெற்று 125 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற தொடர் ஓட்டம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விஜய ஜோதியானது மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து, போர்ட்டர் டவுன் ஹாலில் நிறைவடைந்தது.

அப்போது திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் தொடர் ஓட்டத்தில் வந்த விஜய ஜோதியைப் பெற்று மேடையில் ஏற்றினார். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின், பண்பாட்டு கலாச்சார கலையான சிலம்பாட்டம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here